என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Wayanad by election"
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல்.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதேபோல் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவுகள் தொடங்கின.
அதேபோல் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவும் தொடங்கியது.
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். முதன்முறையாக அவர் அரசியலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வருகிற 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- வயநாட்டு மக்களுக்காக பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் போராடுவேன்.
- பா.ஜ.க. அரசால் விவசாயிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். நேரடியாக முதன்முறையாக அரசியலில் களம் இறங்கியுள்ள பிரியங்கா காந்தியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுவரை மற்ற தலைவர்களுக்காக பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி முதன்முறையாக அவருக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ள அவர், தற்போது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்றைய 2-வது கட்ட பிராசார கடைசி நாள் பிரசாரத்தில் வயாநாட்டு மக்களுக்கு அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் பணியாற்ற விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எனக்கு வாய்ப்பு வழங்கினால் வயநாட்டு மக்களுக்காக பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் போராடுவேன். எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய பாசம் மற்றும் ஆதரவிற்காக வயநாடு மக்களுக்கு உதவ முடியும். பா.ஜ.க. தலைமையிலான பா.ஜ.க. அரசால் விவசாயிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
- வயநாடு தேர்தலில் வளர்ச்சி என்பது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.
- வளர்ச்சி பிரச்சனைகள் குறித்து விவாதிக்காமல் பிரியங்கா ஓடுகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.
பிரியங்கா காந்தி கடந்த மாதம் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை கடந்த 3-ந்தேதி தொடங்கி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே இருப்பதால் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரிதாசும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பத்தேரி தொகுதியில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் அவர் பேசியிருப்பதாவது:-
வனவிலங்குகள் தாக்குதல், ரெயில்வே, மருத்துவம், பழங்குடியினர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வயநாடு தொகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. இதுபோன்ற விஷயங்களை புரிந்து கொள்ளாமல் பிரியங்கா காந்தி, கைத்தட்டலுக்காக அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வருகிறார்.
இந்த விவகாரங்களில் பிரியங்கா நேர்மையாக இருந்தால் விவாதத்திற்கு தயாராக இருக்க வேண்டும். வயநாடு தேர்தலில் வளர்ச்சி என்பது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. வளர்ச்சி பிரச்சனைகள் குறித்து விவாதிக்காமல் பிரியங்கா ஓடுகிறார்.
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.
- வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
- வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியாகி விட்டதால் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானது. அதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இந்தவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதிவியேற்றதால் அந்த தொகுதிகளும் காலியாகின.
இதனால் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்தமாதம் 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிந்தது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.
அவர்களுடன் சேர்த்து வயநாடு தொகுதியில் மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 28-ந்தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அன்றைய தினம் வரை யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
அங்கு பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியாகி விட்டதால் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
- மற்ற கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த 23-ந் தேதி தனது சகோதரரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பிறகு டெல்லி சென்ற அவர், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட நாளை (28-ந்தேதி) வயநாடு வருகிறார். தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரியங்கா காந்தி 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ பயண விவரங்களை வண்டூர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் குமார் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மக்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி நாளை (திங்கட்கிழமை) வருகிறார். பகல் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியில் உள்ள மீனங்காடி பகுதியில் இருந்து அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து பனமரம் மானந்தவாடி, கல்பெட்டாவில் வைத்திரி அருகே பொழுதானா பகுதிகளுக்கும் சென்று ஆதரவு திரட்டுகிறார்.
நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 10 மணிக்கு திருவம்பாடியில் எங்கப்புழா பகுதியில் இருந்து அவர் பிரசாரம் தொடங்குகிறார். ஏர்நாடு, வண்டூர், மலப்புரம் என 7 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரியங்கா காந்தி சென்று மக்களை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு நீலம்பூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
தொகுதியில் ஏற்கனவே தொகுதி அளவிலான மாநாடுகளை கட்சியினர் முடித்து விட்டனர். பூத் அளவிலான பணிகள் வெள்ளிக்கிழமைக்குள் முடிவடையும்.
பிரியங்கா காந்தி தனது 3-வது கட்ட சுற்றுப்பயணத்தின் போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்டு வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வயநாடு தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை.
- வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பிரதமர் மோடி விமானம் மூலம் இங்கு வந்து மீட்பு பணிகளை கண்காணித்தார்.
திருவனந்தபுரம்:
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்டோருடன் வந்து மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ரோடு-ஷோ சென்றனர். அதன் தொடர்ச்சியாக நடந்த பிரசார கூட்டத்தில் இருவரும் பேசினர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, "பாராளுமன்றத்தில் 2 பிரதிநிதிகள் உள்ள தொகுதியாக வயநாடு இருக்கும். பிரியங்கா காந்தி அதிகாரபூர்வ வயநாடு தொகுதி எம்.பி.யாக இருப்பார். நான் அதிகாரபூர்வமற்ற எம்.பி.யாக இருப்பேன்" என்று கூறினார்.
ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். நீலம்பூரில் நடந்த பா.ஜக. வட்டார கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது:-
வயநாடு தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை. காந்தி குடும்பத்தை சேர்ந்த இளைய மைந்தர்கள் சுற்றுலா பயணிகளை போல இங்கு வர தொடங்கி உள்ளனர். மக்களுடன் எப்போதும் இருக்கக்கூடிய ஒருவர் தான் வயநாடு தொகுதிக்கு தேவை. பொம்மை எம்.பி. தேவையில்லை.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பிரதமர் மோடி விமானம் மூலம் இங்கு வந்து மீட்பு பணிகளை கண்காணித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரண உதவியை கூட கேரள அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் கடந்த சில ஆண்டுகால வளர்ச்சி கொள்கைகளை முன்வைத்து வாக்கு கேட்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
- ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.
ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால், வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 29ம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார்.
அதன்படி, வயநாட்டில் இயற்கை பேரிடம் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விளக்கம்.
- தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளது.
வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, வயநாடு தொகுதி காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வயநாடில் இடைத்ததேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளது.
அப்பேது அவர், "கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்