என் மலர்
நீங்கள் தேடியது "wearing Poonul"
- சென்னிமலை முருகன் கோவிலில் பூணூல் அணிவிக்கப்பட்டது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
ஆவணி அவிட்டம் விழா வினை முன்னிட்டு சென்னி மலை முருகப் பெருமானுக்கு பூணூல் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆவணி பவுர்ணமியினை முன்னிட்டு ஆவணி அவிட்ட விழா கொண்டாடப்பட்டது.
சென்னிமலை முருகன் கோவிலில் நடந்த விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர், உட்பட சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அபிேஷக பூஜைகளும் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் அனைவரும் காலை 11 மணி அளவில் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திரண்டு சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணிவித்தனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் ஆவணி பவுர்ணமியையொட்டி ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது. விழாைவயொட்டி முருக பெருமானு க்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் முருகப்பெரு மான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் சாமிகளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. முன்தாக சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது.
விழாவில் சென்னிமலை, காங்கயம், வெள்ளோடு, ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவில் சிவாச்சாரியர்கள் சென்னிமலை டவுன் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பூணூல் மாற்றி அணி வித்தனர்.