என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "who tried to participate"
- இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
- இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஈரோடு:
சினிமா சண்டை இயக்குனர் கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறினார். இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்த கைதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ப ட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.
ஆனால் அதையும் மீறி இந்து முன்னணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காளை மாட்டு சிலை, மரப்பாலம் சோலார் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.