search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman sub-inspector"

    பரமத்தியில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி, நடுத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் பிரபு (வயது 35). இவர் தனியார் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (35). இவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் கனிஷ் என்ற மகன் உள்ளார். கனிஷ், கரூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறான்.

    நேற்று மாலை பரமத்தி கோட்டையண்ணன் சாமி கோவில் அருகே உள்ள ஒரு முட்புதரில் பிரபு கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரபு மர்ம மரணம் தொடர்பாக உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    பிரபு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அண்ணன் மோகன், அக்காள் யசோதா ஆகியோர் உள்ளனர். இதில் மோகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அக்காள் யசோதாவுக்கு திருமணமாகி கணவர் மனோகரனுடன் கரூர் அருகே உள்ள புகழுர் தமிழ்நாடு அரசு காகித ஆலை குடியிருப்பில் வசித்து வருகிறார். மனோகரன் புகழுர் காகித ஆலையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பிரபுவுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகாவுக்கும் திருமணம் நடந்தது. அதன்பின்னர் கிருத்திகாவுக்கு வெங்கமேடு போலீஸ் நிலையத்துக்கு இடமாறுதல் கிடைத்தது. இதனால் பணிக்கு செல்ல ஏதுவாக அவர், கரூர் அருகே உள்ள ஏமூர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, அவர் தூத்துக்குடிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    நேற்று காலையில் வீட்டில் இருந்த பிரபு காகித ஆலையில் உள்ள தனது அக்காள் யசோதா வீட்டிற்கு சென்று, அங்கு சிறிது நேரம் அமர்ந்து பேசினார். அப்போது அவர் சோகத்துடன் பேசியதாக தெரிகிறது. பின்னர் சொந்த ஊருக்கு போகிறேன் என கூறிவிட்டு நாமக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார்.

    தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நேராக பரமத்தி கோட்டையண்ணன் சாமி கோவிலுக்கு சென்ற அவர், அங்கு நின்று கிருத்திகாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பில் பேசினார்.

    அப்போது, வீட்டில் இருந்து நான் வெளியே வந்து விட்டேன். நான் வி‌ஷம் குடித்து விட்டேன். சாக போகிறேன் என கூறினார். உடனே, கிருத்திகா நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?, ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்டார். அதற்கு பிரபு பதில் எதுவும் சொல்லவில்லை. செல்போன் வீடியோ அழைப்பையும் துண்டித்து விட்டார். அதன் பிறகு தான் பிரபு கழுத்து பகுதி துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    வி‌ஷம் குடித்து விட்டேன் என்று கூறிய அவர், கழுத்து இறுக்கி இறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபு பிணமாக கிடந்த இடம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். அங்கு அடர்ந்த புட்புதர்கள் நிறைந்து உள்ளன. ஆகவே, பிரபுவை ஆள்நடமாட்டம் இல்லாத இந்த பகுதிக்கு யாரேனும் அழைத்துச் சென்று துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    பிரபு, கைவிரலில் அணிந்திருந்த மோதிரமும், கழுத்தில் தங்கச் சங்கிலியும் அப்படியே இருந்தது. மேலும் சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் நகை, பணத்துக்காக அவரை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதோ? காரணங்கள் இருக்கின்றன. இவற்றை போலீசார், துரிதமாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படஉள்ளது. #tamilnews
    திருச்சியில் நாளை நடைபெற இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியர் திருமணம் ரூ.15 லட்சம் வரதட்சணை பிரச்சனையால் நிறுத்தப்பட்டது. #Dowryharassment
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துவ ரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சூரியகலா. இவருக்கும் மணப்பாறை அருகே சாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (12-ந்தேதி) மணப்பாறையில் நடைபெறுவதாக இருந்தது. அருண்குமார் மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.



    இந்த நிலையில் அவர், சூரியகலாவிடம் தனக்கு ரூ.15 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று கூறினாராம்.

    இதனால் மனம் உடைந்த சூரியகலா, இது தொடர்பாக அருண்குமாரின் தாய் மல்லிகா, மாமா கிருஷ்ணன், சகோதரி ஜெயபிரபா ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்களும் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூரியகலா ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் ரூ.15 லட்சத்தை முழுமையாக தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட சூரியகலா, மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், அருண்குமார் மற்றும் மல்லிகா, கிருஷ்ணன், ஜெயபிரபா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் அருண்குமார் தரப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெற இருந்த திருமணம் வரதட்சணையால் நிறுத்தப்பட்டு விட்டது. #Dowryharassment
    ×