search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women entitlement amount"

    • ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • 11 லட்சத்து 86 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. இதில் தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இதில் விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து செல்போனில் குறுஞ்செய்தியும் அனுப்பப் பட்டிருந்தது.

    மேலும் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணைதளத் தையும் தமிழக அரசு தொடங்கி இருந்தது.

    இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மனு நிராகரிக்கப் பட்டதற்கான காரணத்தை தெரிந்து அறிந்து கொள்ள முடியும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

    அதை அறிந்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். செப்டம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி வரை மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் பிறகு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.

    தற்போது மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் தொலைபேசி வாயிலாக விண்ணப்ப தாரரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கின்றனர். சில வீடுகளுக்கு நேரில் சென்றும் விசாரித்து வந்த வண்ணம் உள்ளனர்.

    இதில் தகுதியானவர்களுக்கு செல்போனில் இப்போது குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. இது மட்டுமின்றி ஏற்கனவே முதற்கட்டத்தில் மனு கொடுத்து அதில் விடுபட்டவர்களுக்கும் இப்போது தகுதி பார்த்து குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட திட்டத்தை விழாவாக நடத்தி தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 10-ந்தேதி இந்த திட்டத்தின் 2-ம் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    அதன்படி தகுதியான மகளிருக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சென்று ரூ.1000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    • பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை
    • குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள்- ஈரோடு பெண்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். ஆனால், தகுதியுடையவர்களுக்கு நேற்றில் இருந்து வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது.

    பணம் கிடைத்த பெண்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டைத் சேர்ந்த வீட்டு வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் 1000 ரூபாய் கிடைக்கப் பெற்றது குறித்து கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் கிடைத்ததில் ரொம்ப ரெம்ப மகிழ்ச்சி. முதலமைச்சர் பெண்களுக்காக இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை. முதலமைச்சர் கொடுப்பது தாய் வீட்டு சீர் போன்று உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி, வாழ்த்துக்கள். ஹேப்பி முதலமைச்சர் சார்... என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

    டெய்லர் வேலை பார்க்கும் பெண் கூறுகையில் ''இந்த பணத்தை செல்வ மகள் திட்டத்திற்கு பயன்படுத்துவேன். இதை நான் செலவு செய்ய மாட்டேன்'' என்றார்.

    வேலூரை சேர்ந்த பெண்கள் ''ஆயிரம் ரூபாய் கிடைத்தது மகிழ்ச்சி. இரண்டு வருடத்திற்கு முன்பாக இதை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இதை வைத்து மளிகை பொருட்கள், ஆஸ்பத்திரி செலவை சமாளிக்கலாம்'' என்றனர்.

    சேலம் மாவட்டைச் சேர்ந்தவர் பெண் ஒருவர் ''சிலிண்டர் வாங்குவதற்கு, சொந்த செலவிற்கு, மருத்துவ செலவு ஏற்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

    மற்றொரு பெண் ''எனது கணவர், கால் முறிந்து வேலைக்கு போகாமல் உள்ளார். நானும் காலில் அடிப்பட்டு வேலைக்கு செல்லவில்லை. இந்த நேரத்தில் இந்த பணம் உதவியாக இருக்கும். முதல்வருக்கு நன்றி. இவ்வளவுதான் எனக்கு பேசத்தெரியும்'' என்றார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.
    • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் மற்றும் மேசேஜ் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. திட்டம் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ள நிலையில் இன்று வங்கி கணக்கில் பணம் வந்ததால் குடும்ப தலைவிகள் ஹேப்பியோ... ஹேப்பி...

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது.
    • சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது. தேனி மாவட்டம் சில்வார்பட்டி,

    ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சில்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரேசன் கடை ஒன்றில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப டோக்கனை வழங்கினார்.

    பின்னர் மகளிர் உரிமைத்தொகை பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், சில்வார்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாராம் மற்றும் கனகமணி பி.டி.ஓ. விஜயமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
    • வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    இதற்காக நடப்பு ஆண்டில் ஒரு கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவது குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதே போல ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் கூட்டாக வசித்து வருபவர்களும் இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனை பெற தீவிரமாக உள்ளனர். இதனால் கூட்டு குடும்பங்களாக உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பதிவாகின்றன. ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

    வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
    • தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். பெருந்தலைவருக்கு செய்கிற மரியாதையிலேயே, பெரிய மரியாதை இதுதான். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கொணடு வரப்பட்டதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தில் பா.ஜ.க. இதற்கு எதிராக செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டங்கள் கூட பாரதிய ஜனதா கொண்டு வரவில்லை.

    9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு புதிய சாலை கூட கொண்டு வரவில்லை. இங்கு நடைபெறுவது எல்லாம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே இருக்கிறது. அதனோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் முடிவு பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பா.ஜ.க. புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். இது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா. நான் சொல்றேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்கு காரணம் இங்கே இருக்கிற பணத்தை சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான். இது அரசியல் ஆயிடுமா. இதனால் யாருக்கு என்ன பலன் அண்ணாமலை அளந்து பேச வேண்டும். செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.

    அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் நிபந்தனைகள் இருக்கும். நிபந்தனைகள் இல்லாமல் எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். மோடி 9 வருடத்தில் எதையுமே சாதிக்கவில்லை. எனவே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள், ஜாதியை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கின்றனர். இந்தியாவில் பல ஜாதிகள், பல மதங்கள் உள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளார். இதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
    • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற தி.மு.க. அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது.

    நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்க, தி.மு.க. எதிர்பார்க்கும் தகுதிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

    குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது.

    தமிழக மக்கள் கடினமான உழைப்பாளிகள். வேலைக்குச் செல்லாமல், டீக்கடை, பஜ்ஜி கடை, பிரியாணி கடையில் பாக்சிங் செய்து திரிய, தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் இல்லை என்பதை, முதலமைச்சருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

    அடுத்த தகுதி, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கும் திறனற்ற தி.மு.க. அரசுக்கு, மின்சாரக் கட்டணம் கட்டவே எளிய மக்களின் பாதி வருமானம் போய் விடுகிறது என்பது தெரியாதா?

    தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று, சென்ற ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்தது. இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படாது என்ற விசித்திரமான நிபந்தனையை இட்டுவிட்டு, ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என்று எப்படிக் கூறுகிறார் முதலமைச்சர்?

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம். உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர, தமிழக மக்களுக்கு அல்ல.

    நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    ×