search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women police station"

    • காலியாகும் பழைய கட்டிடத்தை புதுப்பித்து உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்வு காண திருச்செந்தூர் போன்ற இடங்களில் உள்ள மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தற்பொழுது பழைய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகம் அருகில் இப்பொழுது புதிய தாலுகா அலுவலகம் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில் பழைய கட்டிடத்தில் வேளாண்மை துறை அலுவலகம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கு இப்பகுதி அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பழமையான தாலுகா அலுவலக கட்டிடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்திட புதுப்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி அரசியல் கட்சியினரும்,

    பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக ம.தி.மு.க. மற்றும் அரசியல் கட்சியினர் துரித நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் நகர ம.தி.மு.க. சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

    சாத்தான்குளம் தாலுகா பகுதியில் மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்வு காண தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் உள்ள மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்கள் உள்பட பொதுமக்கள் ஒரு நாள் முழுவதும் சிரமப்பட்டு வெளியூர் சென்று வரும் நிலைமை பரிதாபமாக உள்ளது.

    எனவே பல வருடங்களாக சாத்தான்குளம் தாலுகாவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் காலியாகும் பழைய கட்டிடத்தை புதுப்பித்து உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×