என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Championship"
- 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன்.
- மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்
திருவனந்தபுரம்:
பகலில் ஆட்டோ டிரைவர்.... இரவில் ஜிம்மில் பயிற்சி... சாதனை படைத்தும் நிதி இல்லாததால்... சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத சூழல். இது கேரள மாநில ஆட்டோ டிரைவர் ஒருவரின் சோகம்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுகத் அலி. இவர் பொழுது போக்காக தனது பள்ளிப் பருவத்தில் மல்யுத்தம் செய்ய தொடங்கினார். உடற்பயிற்சி கூடம் சென்ற அவர், அங்கு கை மல்யுத்த விளையாட்டை அறிந்து அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். படிப்புக்கு பிறகு ஆட்டோ டிரைவரான சவுகத் அலி, பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய கை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்ற அவர், அக்டோபர் மாதம் கோவாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும், மால்டோவாவில் நடைபெற உள்ள உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். ஆனால் நிதி இல்லாமை காரணமாக அவர் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளார்.
இதுபற்றி சவுகத் அலி கூறுகையில், நான் படிக்கும் காலத்தில் விடுமுறையின் போது கட்டுமான தளங்களில் வேலை பார்த்தேன். அப்போது செங்கல் சுமந்தது, வலுவான தசைகளை உருவாக்க உதவியது. 18 வயதில் தொழில் ரீதியாக கை மல்யுத்தம் போட்டியில் பங்கேற்றேன். இது வரை தங்கம், வெள்ளி, வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றுள்ளேன். 10 முறை தேசிய அளவிலான சாம்பியன் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். 8 முறை உலக சாம்பியன் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனால் போதிய நிதி திரட்ட முடியாததால் அதில் பங்கேற்க முடிவதில்லை. தற்போதும் நிலுவை தேதிக்கு முன்னதாக ரூ.1.8 லட்சம் திரட்ட வேண்டி உள்ளது. அது என்னால் முடியாது.
தற்போது எனது மனைவி நஜ்முன்னிசா, மகன்கள் முகமது இர்பான், முகமது ஷர்பான் ஆகியோரும் கை மல்யுத்தத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மகன்கள் இருவரும் மாநில, மாவட்ட போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர், மனைவி நஜ்முன்னிசா மாநில ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இருப்பினும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாமல் இருப்பது வேதனையாக தான் உள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன் என்றார்.
- புடாபெஸ்ட் நகர போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்
- தற்போது 12-நாள் பயிற்சி முகாமிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்
ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா.
சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான 'நட்பு தூதர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.
நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.
தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.
இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, "இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
கோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.
இதில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார்.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியது.
கோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூர் வீரர் கென் லோ யூவுடன் மோதினார்.
இதில் பிரனாய் 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 3வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி:
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி நடத்துகிறது. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி வைக்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து இருப்பதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியை தங்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சத்யவார்த் காடியன், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுடன் ஆகஸ்டு 5 முதல் 15-ந் தேதிக்குள் நடைபெறும் தகுதி போட்டியில் ஒரு முறை மோதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர்.
- பாரீசில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
எகிப்த் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட 18 வயதான இந்திய வீரர் ருத்ராங்கஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் இத்தாலி வீரர் டானிலோ டென்னிஸ் சொலாஸ்ஸோவை 17-13 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.
இதன் மூலம் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்