என் மலர்
டென்மார்க்
- அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.
- நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என்றார் கிரீன்லாந்து பிரதமர்.
நூக்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
- கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை
- டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன்லாந்து என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.
இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் 2019 இல் அவர் அதிபராக இருந்தபோதே விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்தது. 2020 இல் நடந்த தேர்தலில் டிரம்ப் ஜோ பைடனுடன் ஆட்சியை பறிகொடுத்தார்.
ஆனால் 2024 நவம்பரில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். எனவே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கிரீன்லாந்து தீவை வாங்கும் பேச்சை கொளுத்தி போட்டுள்ளார்.
கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை என்று தனக்கு சொந்தமாக ட்ரூத் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் டிரம்ப் பதிவிட்டார்.
இதற்கு கடும் கண்டம் தெரிவித்த டென்மார்க் பிரதமர் Múte Egede, கிரீன்லாந்து எங்களுடையது, நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தை நாம் இழக்கக் கூடாது என்று தெரிவித்தார்
இந்நிலையில் தற்போது டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக் நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த அரச கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தில் அவற்றில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.
புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு [raam] குறியீடு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் இடையே உள்ள கல்மார் யூனியன் மரபை குறிக்கும் விதமாக முந்தைய அரச கோட்கள் ஆப் ஆர்ம்ஸ் சின்னம் இருந்தத நிலையில் தற்போது அதை மாற்றி டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

முன்னதாக அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணச் செலவைக் குறைக்காவிட்டால், பனாமா கால்வாய் மீதான உரிமையை மீண்டும் அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கனடாவை நாடு என்ற அந்தஸ்தில் இருந்து குறைத்து அமெரிக்காவின் மாகாணமாக மாற்றுவோம் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இவ்வாறு வெளிநாடு அரசுகளில் டிரம்ப்பின் அதிக பிரசங்கித்தனம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துங்ஜாங்
உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 13-21 என இழந்த பி.வி.சிந்து, அடுத்த செட்டை 21-16 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் 9-21 என எடுத்து காலிறுதியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளிய்றினார்.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன வீராங்கனையான ஹான் யூ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 18-21 என இழந்த பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 21-12, 21-16 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை சந்திக்கிறார்.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி, மலேசியாவின் பேர்லி டான் மற்றும் முரளிதரன் தினா ஜோடியுடம் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-19, 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, கனடாவின் கெவின் லீ மற்றும் எலியானா ஜாங் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 22-20, 19-21, 22-24 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபே வீராங்கனையான பை யூ போ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-8 என பிவி சிந்து வென்றார். இரண்டாவது செட்டில் 13-7 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சீன தைபே வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் காங்சு உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-12 என வென்ற லக்ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் குயென் உடன் மோதினார். இதில் மாளவிகா 13-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்து வீராங்கனையிடம் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர்.
- இச்சம்பவத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
நார்வே நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர். இதனால் விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், 'பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது' எனவும் உறுதியளித்துள்ளது.
- டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg].
- இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல பியர் மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg]. இந்நிறுவனத்தின் பார்ட்நர்ஷிப்பில் இந்தியாவில் CSAPL நிறுவனமும் நேபாள நாட்டில் கூர்க்கா ப்ரியூயரி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த இரண்டு பார்ட்நர்ஷிப் நிறுவனங்களையும் 744 மில்லியன் டாலர்களுக்கு [ரூ.6,234 கோடிக்கு] விலைக்கு வாங்க கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதன்படி CSAPL நிறுவனத்தில் ஏற்கனவே அதிக பங்குகளை வைத்துள்ள கார்ல்ஸ்பெர்க், அதில் மீதமுள்ள 33.33% பங்குகளையும் தற்போது வாங்க உள்ளது. மேலும் நேபாள நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கார்ல்ஸ்பெர்க் வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி விரைவில் இந்த இரண்டு நிறுவனமும் கார்ல்ஸ்பெர்க் நிர்வாகத்தின் கீழ் செல்கிறது.

ஆசியாவில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் வலுவாகக் காலூன்ற இது ஒரு வரலாற்று நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம்.
- பொது வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
- இதை சற்றும் எதிர்பாராத அவர், இந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்தார்.
டென்மார்க் பிரதமராக மேட் ஃப்ரெடெரிக்சன் இருந்து வருகிறார். இவர் டென்மார்க்கின் மத்திய கோபென்ஹாகென்னில் சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். உடனே அந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என பிரதமர் அலுவலம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டென்மார்க் போலீஸ், பிரதமரை தாக்கிய நபரை கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவத்தில் பிரதமர் சற்று அழுத்தத்துடன் இருந்தார். பின்னர் பாதுகாப்பு வளையத்துடன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் தேர்தல் டென்மார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஸ்லோவாகிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி.
- விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.
பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் கூறியிருந்தார்.
மேலும், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, டென்மார்க்கில் இன்று முதல் முறையாக பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன்கள் சார்ல்ஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.
காசி ஆனந்தன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.
- பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம்.
பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.
பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம்.
பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.