என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wrestling federation"
- பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சாக்ஷி மாலிக் வீட்டிற்குச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது.
- அதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் தேர்வானார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்கமுடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்நிலையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இன்று நடைபெற்றது.
- இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். 47 உறுப்பினர்களில் 40 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில்,
குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
#WATCH | Delhi: Wrestler Sakshi Malik breaks down as she says "...If Brij Bhushan Singh's business partner and a close aide is elected as the president of WFI, I quit wrestling..." pic.twitter.com/26jEqgMYSd
— ANI (@ANI) December 21, 2023
- இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைநகர் டெல்லியில் 2 மாதத்தும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிஜ் பூஷன் தலைமையிலான மல்யுத்த கூட்டமைப்பை விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் அடாக் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இதற்கிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும். 21-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். 47 உறுப்பினர்களில் 40 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு வருகிற ஆகஸ்ட் 7-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பதவி விலக கோரியும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் வீரர்-வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்தலை ஜூலை 11-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்று உரிமை கோரிய அசாம் மல்யுத்த சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கவுகாத்தி ஐகோர்ட்டு, தேர்தலை நடத்த தடை விதித்தது. இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே கவுகாத்தி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தடை விதித்தது.
இந்நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு வருகிற ஆகஸ்ட் 7-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 4 மற்றும் 6-ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவு செய்யபட்டது. பின்னர் 11-ந் தேதியை தேர்ந்தெடுத்தனர். ஆனாலும் அதில் தாமதம் ஏற்பட்டு ஆகஸ்ட் 7-ந் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் போகும்போது, ஒரு பயிற்சியாளரோ, மருத்துவரோ உடன் வருவதில்லை.
- அமைப்பின் தலைவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
உலக அரங்கில் மூவர்ண கொடியின் பெருமையை உயர செய்து, இந்தியாவை மிக பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஆவர். ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று தந்து பெருமை தேடி தந்தவர்கள்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் திடீரென நேற்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பூனியா கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதுபற்றி விளக்குவோம் என கூறினார்.
இதன்பின் நேற்று மாலை, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பினரால் வீரர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறினார். இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்தபோது, மனதளவில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் என்னை கொடுமைப்படுத்தினார்.
ஒவ்வொரு நாளும் எனது வாழ்வை முடித்து கொள்ளலாம் என நான் நினைத்தேன். எந்தவொரு வீரர், வீராங்கனைக்கும் ஏதேனும் நடந்து விட்டால், அதற்கு தலைவரே பொறுப்பாவார். பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்புக்கு சாதகமுடன் நடந்து கொள்ளும் சில ஆண் பயிற்சியாளர்கள், பெண் பயிற்சியாளர்களிடம் தவறாக அணுகுகிறார்கள். அவர்கள் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
அமைப்பின் தலைவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அவர்கள் (கூட்டமைப்பு) எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகின்றனர். எங்களை சுரண்டுகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் போகும்போது, ஒரு பயிற்சியாளரோ, மருத்துவரோ உடன் வருவதில்லை. நாங்கள் இதுபற்றி கேட்டால் பதிலுக்கு மிரட்டப்படுகிறோம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால், போராட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, எந்த வீரரையாவது கூட்டமைப்பு துன்புறுத்தியது என கூற யாரேனும் முன்னே இருக்கிறார்களா? என கேட்டார். அதன்பின் அவர் கூறும்போது, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி எதுவும் நடந்திருந்தால் தூக்கில் தொங்க தயார். வினேஷ் போகத்திடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.
அவர் ஏன் ஒலிம்பிக்கின்போது, நிறுவனத்தின் லோகோ (அடையாள சின்னம்) தெரியும்படியான உடையை அணிகிறார்? அவர் போட்டியில் தோல்வி அடைந்தபோது கூட, நான் அவரை ஊக்கப்படுத்த மட்டுமே செய்தேன். பாலியல் துன்புறுத்தல் என்பது மிக பெரிய குற்றச்சாட்டு. எனது பெயர் இதில் இழுக்கப்பட்டு இருக்கும்போது, நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறினார். இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, இந்தியாவின் உச்சப்பட்ச தேசிய விளையாட்டு கழகம் என கூறப்படும் இந்திய விளையாட்டு கழகம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பிற வீரர், வீராங்கனைகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி அதில் வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் நடந்து வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு வழிவகுத்த விசயங்கள் மற்றும் காரணங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
அதேவேளையில், 41 மல்யுத்த வீரர், வீராங்கனைகள், 13 பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும், மகளிர் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் லக்னோவில் ஜனவரி 18-ந்தேதி (நேற்று) தொடங்க இருந்தது. எனினும், இந்த விவகாரம் சூடு பிடித்ததும் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய விளையாட்டு கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி 72 மணி நேரத்தில் பதிலளிக்க மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதேபோன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, டெல்லி மகளிரணி தலைவர் ஸ்வாதி மாலிவல் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார். இந்திய மூவர்ண கொடியின் பெருமையை உயர செய்தவர்கள், நாட்டை மிக பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள் நீதி கேட்டு, ஒன்று கூடி, கடும் குளிரில் போராட்டம் நடத்தியது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என டுவிட்டரில் அவர் தெரிவித்து உள்ளார்.
- விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.
- லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் சாலையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அமித் தன்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
இதுகுறித்து, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் கூறும்போது, "பிரிஜ்பூஷனின் பாலியல் தொல்லைக்கு குறைந்தது 10 முதல் 12 வீராங்கனைகள் உள்ளாகி இருக்கிறார்கள். இதை அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் விவரத்தை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது தெரிப்பேன்" என்றார்.
ஆனால் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த நிலையில் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக விளையாட்டு அமைச்கம் தரப்பில் கூறும்போது, "இவ்விவகாரம் விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.
மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்திய போராட்டத்தையும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க தவறினால் தேசிய விளையாட்டு மேம்பாட்டு குறியீடு 2011 விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் பயிற்சியாளர்கள் மீது வீராங்கனைகள் அளித்த புகார்களின் நகலையும், இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களையும் வருகிற 21ம் தேதிக்குள் கேட்டுள்ளது.
இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு போலீசை மகளிர் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பிரிஜ்பூஷன் ஷரன்சிங் பாரதீய ஜனதா எம்.பி. ஆவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்