என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Young man died"
- விக்னேஷ் நேற்றிரவு வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
வள்ளியூர் பகுதியில் வசித்து வந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் விக்னேஷ் (வயது 31).
இந்நிலையில் விக்னேஷ் நேற்றிரவு நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொன்னாக்குடி வெள்ள நீர் கால்வாய் புதிய பாலம் அருகே விக்னேஷ் சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர் பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர்.
தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக நெல்லை அரசு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மே லும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்ப டுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.
- பைக்கில் சென்ற வாலிபர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.
- படுகாயமடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகில் உள்ள விருதலைப்பட்டி மக்கள் நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வருகிறார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
மினுக்கம்பட்டி பிரிவு அருகே சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். நீண்ட நேரம் அவர் கீழே விழுந்து எழ முடியாமல் தவித்து வந்தார்.
பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ரெயிலை நிறுத்தி சோதனை யிட்ட போது என்ஜின் முன் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் சிக்கி இருந்தது.
- போலீசார் அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்த ரெயில் என்ஜின் பகுதியில் ஒரு ஆணின் உடல் சிக்கிக் கொண்டு இருந்ததை பார்த்த கேட் கீப்பர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயிலை நிறுத்தி சோதனை யிட்ட போது என்ஜின் முன் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் சிக்கி இருந்தது. போலீசார் அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? அவர் எவ்வாறு என்ஜினில் சிக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
- மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக இறந்து கிடந்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை நல்லேந்திர புரத்தைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலித்தொழி லாளி.இவரது மகன் கவுதம புத்தர் (வயது 18). இவர் மனநலம் பாதிக்க ப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சுமார் மாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள 40 அடி ஆழமும், 30 அடி தண்ணீரும் உள்ள கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார். இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அதன் பேரில் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவக்கு மார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.
இதையடுத்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அருண் நாரா யணன்,ஏட்டு கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் மாயமான கவுதம புத்தர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
- தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் நல்லகாமு மகன் காமராஜ் (வயது 36). இவர் தனது நண்பர் கருப்பையா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடி-தேனி சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலை காளியம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த 2பேரையும் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிசிக்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தனியார் நிறுவன ஊழியருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமாக இறந்துகிடந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அண்ணாநகர் நந்தவனத்தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் அழகுராஜா (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது அத்தை மகள் மீனா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரினி என்ற பெண் குழந்தை உள்ளது. அழகுராஜாவுக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அழகுராஜா உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அழகுராஜாவின் தம்பி கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவிடம் விசாரித்த போது அழகுராஜாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. திடீரென இறந்து விட்டார் என கூறினார்.
ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து அழகுராஜாவின் உடலை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாக அர்ஜூன் சென்ற தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது.
- விபத்தில் பலத்த காயமடைந்த நாக அர்ஜூன் உயிரிழந்தார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நாக அர்ஜூன் (வயது 28). இவர் நேற்று மாலை ஏர்வாடிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது. இந்த விபத்தில் நாக அர்ஜூன் படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றார்.
- லிங்கதுரை தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார்.
- வேகமாக சென்ற கார் அங்குள்ள மரத்தின் மீது மோதியது.
நெல்லை:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் லிங்க துரை(வயது 28).
மரத்தில் மோதியது
இவர் தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். நேற்று அங்கிருந்து மீண்டும் காரில் இட்டமொழிக்கு திரும்பினார். அப்போது அவருடன் அவரது சகோதரியின் 6 வயது மகன் அமலேஷ் புறப்பட்டு வந்தார்.
நேற்று மதியம் நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள மான் பூங்கா அருகே மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாட்டில் சிக்கி காரை ஓட்டி வந்த லிங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதிர்ஷ்டவசமாக சிறுவன் அமலேஷ் காயமின்றி உயிர் தப்பினான்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கங்கைகொண்டான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த லிங்கதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் விபத்தில் காங்கிரஸ் நிர்வாகி பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. காலனியைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 28). இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலக்கோட்டை இளைஞரணி நகரச் செயலாளராக உள்ளார். நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வத்தலக்குண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று இரவு சென்று விட்டு நிலக்கோட்டை- வத்தலக்குண்டு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். டவர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முத்து (24) என்பவரின் பைக் நேருக்கு நேராக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கவுதம் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த அவரது உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் முத்து கைது செய்யப்பட்டார்.
- தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
- பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு ஜெபராஜ் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெபராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.
- நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகமது (வயது 27).
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஜா முகமது மற்றும் 2 பேரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகமது (வயது 27).
இவர் கடந்த 13-ந் தேதி மேலப்பாளையம்-அம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த உச்சிமாகாளி(24) தனது சகோதரர் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் காஜா முகமது படுகாயம் அடைந்தார்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஜா முகமது மற்றும் 2 பேரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காஜா முகமது இன்று பரிதாபமாக இறந்தார்.
மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள தோப்பு பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தூரபாண்டி (வயது 32). இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு நகை கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரும் தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் காளிதாஸ் ( 24 ) ஆகிய 2 பேரும் நிலக்கோட்டையில் இருந்து தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செந்தூரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளிதாஸ் பலத்த காயங்களுடன் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்