என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youngman murder"
- ஆலங்குளம் கருவந்தா கோவில் கொடை விழாவில் வாலிபர் கொலை
- ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் கைது.
நெல்லை:
நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் சேதுபதி( வயது 20) இவரது உறவினர் வீடு ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தாவில் உள்ளது.
கடந்த 3-ந்தேதி கருவந்தாவில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சேதுபதி சென்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சேதுபதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சந்திரசேகர், ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கருவந்தாவை சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
கருவந்தா கோட்டை தெருவை சேர்ந்தவர்கள் சேர்மராஜா(வயது 27), மணிகண்டன்(25), சாமுவேல் சுகுமார்(26). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்களில் சேர்மராஜா ஊர்க்காவல் படை வீரராக உள்ளார். மற்ற 2 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர்.
சம்பவத்தன்று கோவில் கொடை விழாவின்போது சேதுபதி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேரும் சேர்ந்து சேதுபதியை சத்தம் போட்டுள்ளனர்.இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து சேதுபதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் கடந்த 23-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் இதுவரை அடையாளம் தெரியாததால், மாயமானவர்கள் பட்டிலை கொண்டு அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரும் உள்ளனரா? என்றும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் அடையாளங்களோடு யாரேனும் உள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி மகாலெட்சுமி நகரை சேர்ந்த முகமது ரியாஸ் நேற்று முள்ளக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- ரியாசை முத்தையாபுரத்தை சேர்ந்த மாரிசெல்வம்(23), கனக சபாபதி(29) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மகாலெட்சுமி நகரை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ரியாஸ்(வயது 22).
இவர் நேற்று முள்ளக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சம்பவஇடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் ரியாசை முத்தையாபுரத்தை சேர்ந்த மாரிசெல்வம்(23), கனக சபாபதி(29) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
ரியாசின் குடும்பத்தினர் சில வருடங்களுக்கு முன்பு முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது ரியாசும், மாரி செல்வம், சபாபதி ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் ரியாசின் குடும்பத்தினர் வீடு மாறிய பிறகும், ரியாஸ் அடிக்கடி முத்தையாபுரம் சென்று நண்பர்களுடன் பேசி பழகி வந்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் மாரிசெல்வம், கனக சபாபதி ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திய போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த மாரி செல்வம், கனகசபாபதி ஆகிய இருவரும் ரியாசை அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்