search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youssef Dekeke"

    • வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    • இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

     

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவரே இணையத்தின் நாயகன். ஆனால் அந்த 45 நொடிகளுக்காக தான் தனது வாழ்க்கை முழுவதும் உழைத்ததாக யூசுப் மனம் திறந்துள்ளார்.

     

     

    தனது வெற்றி குறித்து துருக்கி ஊடகத்தில் பேசியுள்ள யூசுப், எனக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவைப்பட்டதில்லை, எனது நண்பர்கள் கூட அது பற்றி என்னிடம் கேட்பதுண்டு. ஏன், பிற வீரர் வீராங்கனைகளும் என்னிடம் அதுபற்றி கேட்டனர். நான் அவர்களிடம் சொல்வதெல்லாம், நான் இயல்பாக இருக்க விரும்புகிறேன், நான் இயற்கையாகவே ஒரு ஷூட்டர் என்று தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் துருக்கியின் சிவில் பாதுகாப்புப் படையான Gendarmerie இல் பறிச்சி பெற்றவர் ஆவார். 2001 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடுதல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். ISSF உலக சாம்பியன் போட்டிகளில் 5 கோப்பைகளை வென்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

     

     

    மேலும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நிச்சயம் தான் தங்கம் வெல்வேன் என்றுநம்புவதாக யூசுப் தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் போட்டியின்போது ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்து மற்றொரு கையால் சுட்டது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு மட்டுமல்ல. அதன்மூலம் சுடும்போது அதிக பேலன்ஸை ஏற்படுத்தவும் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், யூசுப் இன்றைய இன்டர்நெட் சென்சேஷன் என்பது மிகையாகாது. 

    ×