என் மலர்
நீங்கள் தேடியது "ஜியோ"
- கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
- ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஜூன் மாதம் அதிரடியாக உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தன. இதனிடையே பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டது. இதனால் பலரும் பிஎஸ்என்எல்-க்கு மாறினர்.
இந்த நிலையில், ரீசார்ஜ் கட்டணத்தை மீண்டும் உயர்த்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த எந்த மொபைல் நிறுவனத்திற்கு மாறலாம் என யோசிக்க தொடங்கி உள்ளனர்.
- 2024 இந்தியா மொபைல் காங்கிரஸ் இன்று டெல்லியில் தொடங்கியது.
- இந்நிகழ்வில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார்.
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கிய 2024 இந்தியா மொபைல் காங்கிரஸை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 4 நாள் நடக்கக்கூடிய இந்த நிகழ்வு ஆசியாவிலேயே மிகப்பெரிய டெக் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்வில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி பிரதமர் மோடி மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடம் 2 முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்தார்.
விழாவில் பேசிய ஆகாஷ் அம்பானி, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் இந்திய பயனர்களின் டேட்டாக்களை சேமிக்க இந்தியாவில் டேட்டா மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிக வேகமாக வளர்ந்து வருவதால் டேட்டா சென்டர் பாலிசி 2020-ஐ மேம்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
- இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
- 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் மட்டும் ஜியோ சேவைகள் இயங்குவதாக கூறப்படும் நிலையில், மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.
நெட்வொர்க் கோளாறு தவிர்த்து மைஜியோ செயலி கூட இயங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
- இந்த மொபைல் போன் குவால்காம் பிராசஸர், கை ஓஎஸ் 2.5.3 கொண்டிருக்கிறது.
- இந்த மொபைல் போன் 2000 எம்ஏஹெச் பே்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலை அறிமுகம் செய்தது. இது 4ஜி பீச்சர் போன் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை ஜியோபோன் பிரைமா 2 மாடலில் 2.4 இன்ச் கர்வ்டு ஸ்கிரீன், குவால்காம் பிராசஸர், கை ஓஎஸ் 2.5.3 ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க பிரைமரி கேமரா, செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஃபேஸ்புக் மற்றும் யூடியூப், ஜியோசாவன், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஜியோபே மூலம் யுபிஐ வசதி வழங்கப்படுகிறது.
ஜியோபோன் பிரைமா 2 மாடலில் எல்இடி டார்ச், ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் ஜியோ சிம் கார்டு சப்போர்ட் மட்டுமே கொண்டிருக்கிறது. மேலும், இதனை 23 மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் 2000 எம்ஏஹெச் பே்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் லூக்ஸ் புளூ நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
- பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளானை பெற 1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
- ஜியோ 336 நாள் பிளான்க்கு 1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியதால், பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு பெரும்பாலான செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டை மாற்றினர். மாற்றி வருகின்றனர். அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தனியார் நொட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையைாக 4ஜி நெட்வொர் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அளித்து வருகிறது.
தற்போது 336 நாள் ரீசார்ஜ் பிளான் ஜியோவை விட பி.எஸ்.என்.எல்.-லில் குறைந்த விலையாகும்.
பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளான்
1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் அழைப்பு, டெல்லி மற்றும் மும்பையில் எம்.டி.என்.எல். நெட்வொர்க் ரோமிங் ப்ரீ. 24 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ. இந்த பிளானிற்காக ஒரு நாளைக்கு சராசரியாக 4.5 ரூபாய் வாடிக்கையாளர்கள் செலவிட வேண்டும்.
ஜியோ 336 நாள் பிளான்
1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 336 நாட்கள் அன்லிமிடெட் கால் வசதி, 24 ஜிபி டேட்டா, மொத்தம் 3,600 எஸ்.எம்.எஸ். ப்ரீ. சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை எளிதாக பெறலாம். இந்த பிளானிற்காக வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு சராசரியாக 5.65 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.
மேலும் ஜியோவில் 448 ரூபாய், 449 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஒரு ரூபாய் வித்தியாசத்தில் இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது.
448 ரூபாய் திட்டத்தில் 28 நாளைக்கு தினந்தோறும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை பெறலாம். அத்துடன் அன்லிமிடெட் கால். 100 எஸஎம்எஸ் ப்ரீ். சோனிலைவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்கா லங்கா, பிளானெட் மராத்தி, ஜியோ டி.வி. ஆகியவற்றை இலவசமாக பெறலாம்.
449 ரூபாய் பிளானில் 28 நாளைக்கு தினந்தோறும் 3 ஜிபி அதிகவே டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை மட்டும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
- ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது.
- இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ஜியோ ஒரு புதிய ஃப்ரீடம் ஆஃபரை (Freedom Offer) அறிவித்துள்ளது. அதில் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் (JioAirFiber) திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெறுவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடியை ஜியோ வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1000 கட்டண சலுகையை வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஜியோ ஏர் ஃபைபர் பயனராக இருந்து, புதிய திட்டத்தை வாங்கினால் அல்லது வேறொரு திட்டத்தை மேம்படுத்தினால், நீங்கள் இந்த ஆஃபருக்குத் தகுதிபெற மாட்டீர்கள். ஜியோ வழங்கும் 30 சதவீத தள்ளுபடியானது ரூ.1,000 இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகும். மேலும் இது புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நீங்கள் இப்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்திருக்கிறீர்கள், இன்னும் உங்களுக்காக பிராட்பேண்ட் இணைப்பு இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த சலுகையை பெறலாம்.
இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15 வரை வழங்கப்படுகிறது.
- மூன்று புது ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- இரு ரீசார்ஜ்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் தனது ரீசார்ஜ்களின் விலையை உயர்த்தியது. விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட பயனர்களில் பலர் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில், ஜியோ நிறுவனம் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ்களை அறிவித்து இருக்கிறது.
புதிய ரீசார்ஜ்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. இத்துடன் ஜியோ சாவன் ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய ரீசார்ஜ்களின் விலை ரூ. 329, ரூ. 949 மற்றும் ரூ. 1049 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
பலன்களை பொருத்தவரை ஜியோ ரூ. 329 சலுகையில் தினமும் 1.5 ஜிபி 4ஜி+டேட்டா, ஜியோ சாவன் ப்ரோ சந்தா உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 949 சலுகை தினமும் 2 ஜிபி 4ஜி+, அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 1049 சலுகையில் தினமும் 2ஜிபி 4ஜி+ மற்றும் அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, சோனிலிவ், ஜீ5 சந்தா உள்ளிட்ட பலன்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களில் வழங்கப்படும் இலவச டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.
- 98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும்.
- 72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும்.
ரிலையன்ஸின் ஜியோ செல்போன் சேவை நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் 72 மற்றும் 98 நாட்கள் என இரண்டு ப்ரீபெய்டு பிளான்களை அறிவித்துள்ளது.
98 நாட்கள் பிளான்
98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும். இந்த பிளான்படி தினந்தோறும் 2GP டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு 2GB என்ற வகையில் 98 நாட்களுக்கு மொத்தம் 196GB டேட்டா வழங்குகிறது. தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் மெசேஜ்கள் இலவசமாக அனுப்பிக் கொள்ள முடியும். அன்லிமிடெட் 5G டேட்டா வசதி இடையூறு இல்லாமல் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் வசதியையும் உள்ளடக்கியது.
72 நாட்கள் பிளான்
72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும். இந்த திட்டத்தில் தினந்தோறும் 2GB டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக 20GB உடன் மொத்தம் 164GB டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்ய முடியும். அன்லிமிடெட் 5G பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த காலக்கட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.
அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:
புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.
இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.
இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது.
- இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்கிறது.
365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- 2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது.
புதுடெல்லி:
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரத் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிசம்பர் 2019-ல் கட்டணங்களை உயர்த்தின. 2016-ல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறை உயர்த்தியது.
2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது. அதே நேரத்தில் 2021 உயர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நான்கு காலாண்டுகளில் ஏர்டெல் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தில் ரூ. 30 மற்றும் 36 உயர்வை வழங்குகிறது.
கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.
மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களை உயர்த்தி ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.
அதன்படி, செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆகவும், 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டம், வரும் ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன எனவும் ஜியோ அறிவித்துள்ளது.