என் மலர்
நீங்கள் தேடியது "நொய்டா"
- இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது.
- இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு கடைக்கு வெளியே வைத்திருந்த பூந்தொட்டியை பி.எம்.டபிள்யூ. காரில் வந்த பெண் ஒருவர் திருடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பி.எம்.டபிள்யூ. காரில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டியை திருடி காருக்குள் வைக்கிறார். இதனை பார்த்த சிலர் அப்பெண்ணின் காரை வழிமறித்து இதுகுறித்து கேட்டபோது தினமும் ஒரு பூந்தொட்டியை எடுத்து செல்வேன் என்று அவள் கூறியுள்ளார்.
இந்த பெண் ஏற்கனவே அக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரண்டு பூந்தொட்டிகளை திருடிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எனினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசாரிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
नोएडा में BMW कार से गमला चोरी करती महिला का वीडियो सोशल मीडिया पर वायरलपूरी खबर: https://t.co/wyEXBYR8Gj pic.twitter.com/C8Ezzmo1lg
— Greater Noida West (@GreaterNoidaW) October 27, 2024
- இளைஞர் ஒருவர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
- வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் தற்கொலை முயன்றதாக சொல்லப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். இதனை எதிர்புற கட்டடத்தில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் 12 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றதாக சொல்லப்படுகிறது.
नोएडा के सुपरटेक केप टाउन में युवक ने किया आत्महत्या का प्रयास, Video @noidapolice #Noida #Suicide #NoidaPolice pic.twitter.com/4yrUpxDh42
— Tricity Today (@tricitytoday) October 21, 2024
- ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்த பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்தார்
- தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாலத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண் மீது வாகனம் மோதியதில் அவர் கீழே தூண் மீது விழுந்து உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் இன்று மதியம் செக்டார் 25 பகுதியில் உள்ள பாலத்தின் மீது தனது இரு சக்கர வாகனமான ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் மீது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதனால் ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். அங்கு அவர் சிக்கித் தவித்த நிலையில் சம்பவ இடத்துக்குப் போலீசும் ஆம்புலன்சும் விரைந்தது. இதனைத்தொடர்ந்து தூணிலிருந்து அப்பெண் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Uttar Pradesh: A scooty-riding girl landed on the pillar of the elevated road near Noida Sector 25 under Sector 20 PS area, after she was hit by an unidentified vehicle. Two men are attempting to rescue her. More details awaited. pic.twitter.com/IsABJQrH1t
— ANI (@ANI) September 21, 2024
- 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
- நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.
நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
- மருந்துகளை பார்த்ததால் மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது.
நொய்டா:
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சன்னிகுமார் (வயது 18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார். அவர் 664 மதிப்பெண் எடுத்துள்ளார். தனது சமோசா கடையில் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர் இந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.
அவர் நீட் தேர்வு குறிப்புகளை பேப்பரில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். நீட் தேர்வுக்காக அவர் இரவு முழுவதும் கண்விழித்து படித்துள்ளார்.
இதனால் அவரது கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் சன்னிகுமார் திறம்பட படித்து இந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.
மருந்துகளை பார்த்ததால் எனக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. மக்களை நோய்களில் இருந்து காக்க வேண்டும் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன். சமோசா விற்பது எனது எதிர்காலத்தை பாதிக்காது தொடர்ந்து இந்த தொழிலை செய்து கொண்டே டாக்டருக்கு படிப்பேன் என்று கூறியுள்ளார்.
சன்னிகுமாரின் வாழ்க்கை போராட்டத்தை கவனித்து வந்த அலேக் பாண்டே என்பவர் மருத்துவ கல்லூரி கட்டணமான ரூ.6 லட்சம் நிதியை அவருக்கு வழங்கியுள்ளார்.
- தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார்.
- இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று அந்த பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், உனது ரேட் என்ன என்று கேட்டு , எங்க அப்பா, மாமா எல்லாமே டி.எஸ்.பி என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட அழுதுகொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். அதில், இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
- சாவகாசமாக சாப்பிட்டபடியும் சில சமயங்களில் பாத்ரூமில் சிகரெட் பிடித்த படியும் பாண் பீடா சாப்பிட்டு எச்சிலை துப்பியபடியும் திருடியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 24 மணி நேரத்துக்குள் நகரின் பல்வேறு வீடுகளில் புகுந்து திருட்டுக் கும்பல் ஒன்று லட்சக்கணக்கில்மதிப்புடைய நகைகள், பொருட்கள் மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு கம்பிநீட்டியுள்ளது.
அந்த வகையில் பூட்டப்பட்ட வீடு ஒன்றுக்குள் கும்பலாக புகுந்த திருடர்கள், ப்ரிட்ஜில் உள்ளவற்றை எடுத்து பக்கோடா சமைத்து சாவகாசமாக சாப்பிட்டபடியும் சில சமயங்களில் பாத்ரூமில் சிகரெட் பிடித்த படியும் பாண் பீடா சாப்பிட்டு எச்சிலை துப்பியபடியும் திருடியுள்ளனர்.
இதுபோலவே ஒரே பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த சுமார் 6 முதல் 7 வீடுகளில் ஒரே மாதிரியான முறையிலே திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ள்ளதை அடுத்தே போலீசார் அனைத்தையும் திருட்டுகளையும் செய்தது ஒரே கும்பல்தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் போலீசில் சிக்காமல் மறைந்திருக்கும் பக்கோடா திருட்டுக் கும்பலால் நொய்டா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
- இதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
நொய்டாவை அடுத்த ஹோஷியர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாத் யாதவ். இவர் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை பார்த்த காவல் துறை தாமாக முன்வந்து விசாரித்தது. விசாரணை முடிவில் வீடியோ வெளியிட்டது ராம்பாத் யாதவ் என்று காவல் துறை கண்டுபிடித்தது. இதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ராம்பாத் யாதவ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்பாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்.
"பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ராம்பாத் யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் பேசி, வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. காவல் துறை இந்த வீடியோவை பார்த்து, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது," என்று காவல் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.