என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கணினி
நிறம் மாறும் ஆப்ஷன், ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்ட புது குளிர்சாதன பெட்டி அறிமுகம்
- எல்ஜி நிறுவனம் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அசத்தலான புது குளிர்சாதன பெட்டியை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இதில் எல்இடி லைட் பேனல்கள் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்ஜி நிறுவனத்தின் புதிய குளிர்சாதன பெட்டி - எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டி தற்போது நடைபெற்று வரும் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டியின் முன்புறம் உள்ள எல்இடி பேனல்களை கொண்டு பல்வேறு நிறங்களை ஒளிர விடுவது, வித்தியாசமான சிறப்பம்சம் ஆகும். இதில் ஆர்ஜிபி பேனல்கள் உள்ளன.
இவற்றை கொண்டு 22 நிறங்களில் ஒன்றை மேலே உள்ள கதவுகளுக்கும், லோயர் பேனல்களில் 19 நிறங்களில் ஒன்றையும் தேர்வு செய்து கொள்ளலாம். நிறம் மற்றும் தீம் அடிப்படையில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஃப்ரிட்ஜ்-ஐ ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டு மியூசிக் ஸ்டிரீமிங் செய்யலாம்.
சாம்சங் நிறுவனமும் தனது பிஸ்போக் குளிர்சாதன பெட்டியில் இதே போன்ற வசதியை வழங்கும் நிலையில், புதிய எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை இணைத்து குளிர்சாதன பெட்டியின் நிறத்தை விரும்பிய நேரத்தில் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டியின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் இந்திய வெளியீடு பற்றியும் எந்த தகவலும் இல்லை.
ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு இருப்பதால், புதிய எல்ஜி குளிர்சாதன பெட்டியை ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்டவைகளுடன் இணைத்துக் கொண்டு பாடல்களை கேட்க முடியும். இவ்வாறு செய்யும் போது குளிர்சாதன பெட்டியில் உள்ள எல்இடி பேனல்கள் பாடலுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொண்டே இருக்கும். பேனல்கள் ஆப் செய்து விட்டால், லக்ஸ் கிரே மற்றும் லக்ஸ் வைட் டிசைனில் காட்சியளிக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்