search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு - இணையத்தில் லீக் ஆன புது தகவல்
    X

    பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு - இணையத்தில் லீக் ஆன புது தகவல்

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
    • பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன் ஐடியா) என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மிக விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னமும் 4ஜி சேவையை நாடு முழுக்க வெளியிட திண்டாடி வருகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலின் படி பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    திடீரென 4ஜி வெளியீடு தாமதமாக என்ன காரணம் என்றும் டெலிகாம் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட விசேஷ உபகரணங்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்து இருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

    உபகரணங்களை வாங்கும் பணிகளை பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு தான் நிறைவு செய்யும். 4ஜி அப்கிரேடு பணிகளில் பிஎஸ்என்எல் உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்தும், இதுவே வெளியீட்டு தாமதமாக காரணம் ஆகும். இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் போதே பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளையும் வெளியிட முடியும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×