என் மலர்
- வாரந்தோறும் புது புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
- ஓடிடியில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.
வாரந்தோறும் புது புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அனைத்து திரைப்படங்களையும் மக்கள் திரையரங்கிற்கு பார்ப்பதில்லை. அவர்களுக்கு பிடித்த படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கில் தேர்ந்தெடுத்து பார்க்கின்றனர். பல திரைப்படங்களை மக்கள் ஓடிடியில் வெளியான பிறகு தான் பார்க்கிறார்கள். அப்படி சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான பிறகு மக்களின் பாராட்டை பெற்று பெரிய திரைப்படமாக மாறியுள்ளது. அதுப் போன்று இந்தாண்டு ஓடிடியில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.
மகாராஜா {Maharaja}
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது மகாராஜா திரைப்படம். இப்படம் விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது திரைப்படமாக அமைந்தது. அனுராக் காஷ்யப், சாச்சனா, சிங்கம்புலி, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிகஸ் தளத்தில் வெளியானது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு திரைப்படம் உலகளவில் அதன் அங்கீகாரத்தை பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகமாக பார்த்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது திரைப்படம் சீன மொழியில் டப் செய்து தற்பொழுது வெற்றிகரமாக சீனாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் இதுவரை ஓடிடியில் 19.7 மில்லியன் மக்கள் இதுவரை இப்படத்தை பார்த்துள்ளனர்.
க்ரூ {Crew}
ராஜேஷ் ஏ கிருஷ்ணன் இயக்கத்தில் தபு, கரீனா கபூர், கிருத்தி சனான், கபில் ஷர்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியானது க்ரூ திரைப்படம். இப்படம் விமானத்தில் பணி செய்யும் பெண்கள் அந்த விமானத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் வைரத்தை திருடும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் கடந்த மே மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் இதுவரை 17.9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
லாப்பட்டா லேடிஸ் {Laapataa Ladies}
இளம்பெண்கள் இருவர் தங்கள் கணவர்களிடம் இருந்து பிரிந்ததற்கான காரணங்கள் பற்றிய கதை கருவை மையமாக வைத்து லாபட்டா லேடீஸ் படத்தை அமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி இருந்தார். இப்படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஷ்ரிவஸ்தவா, பிரதீபா ரண்டா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பலரின் கவனத்தை பெற்றது. இப்படத்தை இதுவரி ஓடிடியில் 17.1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
டூ பட்டி {Do Patti}
ஷஷங்கா சதுர்வேதி இயக்கத்தில் கஜோல், கிருத்தி சனோன், ஷாஹீர் செய்க் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து நேரடி ஓடிடி வெளியீட்டாக கடந்த அக்டோபர் மாதம் நேட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை நடிகை கிருத்தி சனோன் தயாரித்தார். இதுவே இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும். கிருத்தி சனோன் இப்படத்தின் இரு வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படத்தை இதுவரை 15. மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
சைத்தான் {Shaitaan}
விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா , ஜான்கி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் வெளியானது சைத்தான் திரைப்படம். இப்படம் உலகளவில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த மே மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் இதுவரை ஓடிடியில் மட்டும் 14.8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
கல்கி 2898 ஏடி {Kalki 2898 AD}
நாக் அஷ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் உலகளவில் 1200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.
ஸ்ரீ 2 {Stree 2}
கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரதா கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஸ்ரீ 2 திரைப்படம். இப்படத்தை அமர் கௌஷிக் இயக்கினார். திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று உலகளவில் இதுவரை 874 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி யிலும் பெரும் மக்களால் பாரக்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரேயா சரண் சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படக்குழு டைட்டில் டீசரை நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
- படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார்.
டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா".
"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது - நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படம் குறித்துப் பகிர்ந்துகொண்டதாவது... "திகில்-த்ரில்லர் ஜானர் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, 'அகத்தியா' மூலம் இந்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். 'அகத்தியா' கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.
2025 ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.
- பேபி ஜான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
திரைப்படத்தின் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பாடலான பீஸ்ட் மோட் பாடல் இன்று வெளியானது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புள்ளது.
இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படக்குழு அனைவருக்கு வாழ்த்து தெரிவித்து திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
- அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது.
'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனை தொடர்ந்து ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகி உள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். இதன்பின் நடிகர் அல்லு அர்ஜூனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் அல்லு அர்ஜுனிடம் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பவுன்சராக இருந்த ஆண்டனியை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று ரசிகர்களை தள்ளி விட்டதால் தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என அவரை கைது செய்து. சந்தியா தியேட்டருக்கு அழைத்து சென்று அன்று நடந்ததை மீண்டும் செய்து காட்ட கூறியிருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம்.
- மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் திரிஷ்யம் 3 திரைப்படத்தை குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார்.
- தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.
மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரிக்கும் ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்குகிறார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடிக்க உள்ளனர். இந்த படம் அடுத்த வரும் ஜூலை 25-வது ரிலீஸ் ஆகும்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் இடம் பெற்றுள்ளார். இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜான்வி கபூர் சமீபத்தில் ஜூனியர் என்.டி ஆர் நடித்த தேவரா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்பொழுது இப்படத்திலும் தென்னிந்திய பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'.
- திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது. தற்போது வரை திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இந்நிலையில் திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் 645 கோடி ரூபாய் 16 நாட்களில் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் இந்தி மொழியில் இவ்வளவு வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஸ்ரீ 2 , ஜவான், பதான், பாகுபலி 2, அனிமல் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களின் இந்தி வசூலைவிட இப்படம் அதிகமாக வசூலித்துள்ளது.
இதனால் புஷ்பா 2 இந்தி மொழியில் மட்டும் 3டி தொழில்நுட்பத்துடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்."
- ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்." கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான "அமரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலையும் வாரி குவித்தது.
அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தனுஷ் நடிக்கும் 55 வது திரைப்படமாகும்.
இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. விழாவில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ராகுமார் பெரியசாமி படத்தை குறித்த சில அப்டேட்டுகளை கூறினார். தனுஷ் 55 திரைப்படமும் ஒரு வீரரின் கதையாகதான் இருக்கும். நம் சமூதாயத்தில் பல வெளியில் தெரியாத நிறைய வீரர்கள் அல்லது ஹீரோக்கள் உள்ளன அவர்களை பற்றிய கதையாக D55 திரைப்படம் உருவாகவுள்ளது என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- . திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியான பிறகு உலகம் முழுவது உள்ள மக்கள் இப்படத்தை பாராட்டினர். திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் நடிப்பில் ஓடிடியில் லெவல் கிராஸ் திரைப்படம் வெளியானது. இப்படமும் பலரின் பாராட்டை பெற்றது. இந்நிலையில் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை நடிகர் மம்மூட்டி இன்று வெளியிட்டார். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
- அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்
'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனை தொடர்ந்து ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகி உள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். இதன்பின் நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அப்போது அல்லு அர்ஜுனிடம் கீழ்கண்ட கேள்விகளை போலீசார் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
1. புஷ்பா - 2 சிறப்பு காட்சிக்கு நீங்கள் வருவதற்கான அனுமதியை காவல்துறை மறுத்த தகவல் உங்களுக்கு தெரியுமா?
2. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் நீங்கள் சிறப்பு காட்சிக்கு வருவதற்கான முடிவை எடுத்தது யார்?
3. திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினார்களா?
4. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?
5. தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றுவதற்கு நீங்கள் அனுமதி வாங்கினீர்களா?
6. தியேட்டருக்கு வெளியே ரசிகர்களுடன் பழக உங்களுக்கு அனுமதி உண்டா?
கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜுன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜுன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது.
- அகத்தியா படத்தை பா. விஜய் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது. இவரது தயாரித்த தேவி, தேவி 2, கோமாளி, LKG, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
தற்பொழுது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, சுமோ , ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை பற்றிய அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது.
படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தை பா. விஜய் இயக்கியுள்ளார். ஜீவா, அர்ஜூன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பீரியட் ஃபேண்டசி டிராமா கதைக்களத்துடன் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.