சினிமா
சார்லி சாப்ளினுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபு
நடிகர் பிரபு தனது பிறந்த நாளை பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகும் ‘சார்லி சாப்ளின் 2’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது, நடிகர் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கும்கி அஸ்வின், அரவிந்த் ஆகாஷ், ஜீவன், நடிகை செந்தி பரஞ்ஜோதி, கனல் கண்ணன், ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்து வருகிறார். அம்ரிஷ் இசையமைத்து வருகிறார்.