சினிமா
கே.வி.ஆனந்த் மறைவு... திரை உலகின் பேரிழப்பு - ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பெரும் திறமை கொண்ட ஒளிப்பதிவாளர்-இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு, மிகுந்த வேதனையை தருகிறது. திரை உலகின் பேரிழப்பு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.