null
பத்திரிகையாளர்களின் மைக்கை பறித்து தாக்கிய நடிகர் மோகன் பாபு- அதிர்ச்சி வீடியோ
- மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார்.
- எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு தனது மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மருமகள் மோனிகா ஆகியோர் தன்னை மிரட்டுவதாகவும் அவர்கள் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மோகன் பாபு தனது புகாரில் கூறியதாவது, மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார்.
எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன்.
எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மனோஜுக்கு இடையிலான சொத்து பிரச்சனை தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் சென்றுள்ளனர்.
அப்போது ஐதராபாத்தில் தனது வீட்டின் முன் திரண்டிருந்த பத்திரிகையாளர்களின் மைக்கை பறித்து நடிகர் மோகன் பாபு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோகன்பாபு வீட்டில் இருந்த பாதுகாவலர்கள், பவுன்சர்கள் பத்திரிகையாளர்களின் கேமரா மற்றும் மைக்கை பறித்து உடைத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன் பாபுவின் இந்த செயலுக்கு தெலங்கானா பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.