சினிமா செய்திகள்
வலியால் அவதி- நடிகை குஷ்புவுக்கு கையில் தசை அழற்சி
- மருத்துவர்கள் ஆலோசனைப்படி பிசியோதெரபி எடுத்து வருவதாக கூறினார்.
- கையில் இறுக்கமான உறை வடிவ கட்டுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை குஷ்புவுக்கு இடது முழங்கையில் டென்னிஸ் எல்போ என்ற தசை அழற்சி ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு இந்த மாதிரி தசை நார் அழற்சி வரும். இது ஏற்பட்டால் கடுமையான வலி இருக்கும்.
குஷ்புவும் இந்த அழற்சியின் காரணமாக கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்த வலியையும் பொருட்படுத்தாமல் இன்று ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி பிசியோதெரபி எடுத்து வருவதாக கூறினார்.
கையில் இறுக்கமான உறை வடிவ கட்டுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் பலர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்