null
விபத்தில் சிக்கிய அஜித்.. உடனே போன் போட்டு பேசிய அருண் விஜய்
- அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் நாளை வெளியாகிறது.
- வணங்கான் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்துள்ளார். திரைத்துறை மட்டுமின்றி, கார் ரேசிங் மற்றும் பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித்.
அந்தவகையில், நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெறும் கார் ரேசில் பங்கேற்கிறார். இதற்காக துபாய் புறப்பட்டு சென்றுள்ள அஜித் தினந்தோரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் பந்தய களத்தில் விபத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
விபத்தில் சிக்கிய போதிலும், நடிகர் அஜித் குமார் நலமுடன் இருப்பதாகவும் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் பந்தயத்தில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் விபத்தில் சிக்கிய வீடியோவை பார்த்ததும், நடிகர் அருண் விஜய் அஜித்தின் மேலாளரை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.
அருண் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வணங்கான் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்த போது, "அஜித் சார் தனக்கு பிடித்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார். ரேசிங் எவ்வளவு ஆபத்தானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்."
"வீடியோவை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே சுரேஷ் சாருக்கு போன் செய்தேன். அவர் நடிகர் அஜித் குமார் நலமுடன் இருப்பதாகவும், நாளையும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். அந்தளவு துணிச்சலான நபர் தான் அஜித். அவருக்கு வாழ்த்துக்கள், கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். எல்லா துறையிலும் ஆபத்து இருக்கிறது. அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்," என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.