ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை தட்டி தூக்கிய Bad Girl திரைப்படம்
- Bad Girl திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.
- Bad Girl படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் தேர்வு செய்யபட்டது. தற்பொழுது ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றுள்ளது. இதனை நெட்வொர்க் ஃபார் தி ப்ரோமோஷன் ஆஃப் ஏஷியன் சினிமா என அழைக்கின்றனர். பெரும்பாலான இந்த விருது அறிமுக இயக்குனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை தேர்வு செய்வதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படம் இந்த விருதை வாங்குவது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அங்கீகாரம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு