சினிமா செய்திகள்

சென்னை கார் பந்தயம்- முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நடிகர் அஜித் நன்றி

Published On 2025-01-17 16:58 IST   |   Update On 2025-01-17 16:58:00 IST
  • வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
  • கடினமாக உழையுங்கள். ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்.

சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் கூறியிருப்பதாவது:-

சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்-க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது.

வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கடினமாக உழையுங்கள். ரொம்ப டாக்சிக்காக இருக்காதீர்கள்.

வாழ்க்கை மிக மிக குறுகியது அழகாக வாழ பாருங்கள். உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்காதீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News