சினிமா செய்திகள்
இந்துத்துவா அமைப்பினரின் எதிர்ப்பால்  எம்புரான் படத்தில் 17 கட்

இந்துத்துவா அமைப்பினரின் எதிர்ப்பால் எம்புரான் படத்தில் 17 'கட்'

Published On 2025-03-30 12:49 IST   |   Update On 2025-03-30 12:49:00 IST
  • எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
  • எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இப்படத்திற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பை அடுத்து, எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News