சினிமா செய்திகள்
நடிகர் மனோஜ் மறைவுக்கு திரைப்பிரபலங்கள்  இரங்கல்

நடிகர் மனோஜ் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்

Published On 2025-03-25 22:01 IST   |   Update On 2025-03-25 22:01:00 IST
  • கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் 48 வயதான மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

பாரதிராஜா சேத்பேட்டையில் உள்ள மனோஜ் வீட்டிற்கு வந்தடைந்துள்ளார். இயக்குனர்களான செல்வமணி, ராம், மாரி செல்வராஜ், சேரன், நடிகர் கார்த்தி, நக்கீரன் கோபால் சேத்பேட்டையில் உள்ள மனோஜ் இல்லத்தில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அரசியல்வாதிகளான 

மேலும் இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.பல திரைபிரபலங்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவரது இறுதி சடங்கு தேனி மாவட்டத்தில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News