விடாமுயற்சி திரைப்படத்தை விட 10 மடங்கு மாஸ் ஆக இருக்கும் குட் பேட் அக்லி - ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
- இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. , 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் அஜிகுமாருக்கு படத்தில் மாஸ் சீன்கள் இல்லை என அவர்களது கருத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதெற்கெல்லாம பதிலளிக்கு வகையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் சண்டை இயக்குனர் சுப்ரீம் சுந்தர் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " விடாமுயற்சி திரைப்படம் அஜித்தின் திரைப்படம் போல் இல்லை, மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் எதையெல்லாம் ரசிகர்கள் மிஸ் செய்தார்களோ. அதை விட 10 மடங்கு அதிகமான மாஸ் காட்சிகள் குட் பேட் அக்லி திரைப்படத்திலிருக்கும்.
நீங்கள் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு செல்லும் போது உங்களுக்கு விக்ஸ் மற்றும் ஹால்ஸ் தேவை, ஏனென்றால் திரைப்படம் முழுக்க அத்தனை வாவ் மொமண்ட்ஸ் இருக்கிறது. நீங்கள் கத்தி கத்தி உங்களுக்கு தொண்டை வலி வந்துவிடும்." என கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.