ஜி.வி. பிரகாஷின் 25வது படம் - டீசர் அப்டேட் வெளியீடு
- கிங்ஸ்டன் படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
- சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யா பாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டீசர் நாளை (ஜனவரி 9) மாலை 06.01 மணிக்கு வெளியாகும் என்றும் இதனை நடிகர் தனுஷ் வெளியிடுவார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.