புஷ்பா படத்தால் கெட்டுப்போகும் மாணவர்கள் - தலைமை ஆசிரியர் வேதனை
- புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
- புஷ்பா 2 திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.
இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்நிலையில், படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டு போயுள்ளதாக ஐதராபாத் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்வி ஆணையத்துடன் நடந்த கலந்துரையாடலின் போது பேசிய ஆசிரியர், " அரசுப் பள்ளி மாணவர்களை கையாள்வது மிகவும் கடினமாகி வருகிறது. நான் பணி செய்யும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர். அந்தப் படத்திற்கு எந்தவொரு பொறுப்புமின்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத ஹேர்ஸ்டைலை வைத்துக்கொண்டு, ஆபாசமான முறையில் மாணவர்கள் பேசுகின்றனர். இதெல்லாம் பார்க்கையில் நானே தோற்பதுபோல உள்ளது" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.