சினிமா செய்திகள்

பிரபலம் என்றால் சேற்றை வாரி அடிப்பது நியாயமா?- பாடகி கல்பனா

Published On 2025-03-10 20:34 IST   |   Update On 2025-03-10 20:34:00 IST
  • என் பின்னால் என் கணவர் தான் உள்ளார். அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் என்னால் சாதிக்க முடிகிறது.
  • ஊடகம், யூடியூப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி தண்டிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடகி கல்பனா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் தூக்க மாத்திரைகள் உட்கொண்ட தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் தவறானது. நான் தற்கொலைக்கு முயலவில்லை, அனைவரும் தவறாக பேசுகிறார்கள்.

எனக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் முற்றுலும் தவறானது.

எனக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் சரியில்லை. மகா சிவராத்திரி வரை மிகவும் சிரமப்பட்டு தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.

என் பின்னால் என் கணவர் தான் உள்ளார். அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் என்னால் சாதிக்க முடிகிறது.

உடல்நிலை பாதிப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக மாத்திரைகள் எடுத்து கொண்டேன். அது அதிகளவில் மாத்திரை எடுத்துக் கொண்டதால் ஓவர் டோசேஜ் ஆகி மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன்.

என் கணவர் தான் காவல்துறையினர், மருத்துவரை அழைத்து வர செய்தார், என்னை காப்பாற்றினார்.

ஆனால், என்னை பற்றியும், எனது கணவர் பற்றியும் தவறான செய்திகளை பரப்புகின்றனர்.

பிரபலம் என்றால், சேற்றை வாரி அடிப்படி நியாயமா ?

ஊடகம், யூடியூப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி தண்டிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News