சினிமா செய்திகள்

பராசக்தி திரைப்படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகர்

Published On 2025-03-15 18:36 IST   |   Update On 2025-03-15 18:36:00 IST
  • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் படப்பிடிப்பு கடந்த மாதம் நடைப்பெற்றது தற்பொழுது படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைப்பெற்று வருகிறது. தற்பொழுது படத்தை குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான பேசில் ஜோசப் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பேசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது.

பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மிக வேகமாக படப்பிடிப்பு பணிகள் முடிந்து வருவதால் மொத்த படப்பிடிப்பும் மே மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News