சினிமா செய்திகள்

'யே காளி-காளி ஆங்கேன்' பாடலாசிரியர் தேவ் கோஹ்லி காலமானார்

Published On 2023-08-26 13:48 IST   |   Update On 2023-08-26 13:48:00 IST
  • 80 வயதான தேவ் கோஹ்லி அந்தேரியில் உள்ள வீட்டில் காலமானார்.
  • தேவ் கோஹ்லியின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

மும்பை:

'யே காளி-காலி ஆங்கேன்', 'தில் தீவானா பின் சஜ்னா கே மானே நா' மற்றும் 'சல்டி ஹை க்யா நௌ சே பாரா' போன்ற மறக்கமுடியாத சூப்பர்ஹிட் பாலிவுட் பாடல்களை எழுதிய மூத்த பாடலாசிரியர் தேவ் கோஹ்லி இன்று காலமானார்.

80 வயதான தேவ் கோஹ்லி அந்தேரியில் உள்ள வீட்டில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை ஓஷிவாரா மயானத்தில் நடைபெறுகிறது. கோஹ்லியின் உடல் மக்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்காக பிற்பகல் 2 மணி வரை அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

நவம்பர் 2, 1942 அன்று ராவல்பிண்டியில் (இப்போது பாகிஸ்தான்) ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்த கோஹ்லி, கருப்பு-வெள்ளை முதல் வண்ணத் திரைப்பட சகாப்தம் வரை இசை ஆர்வலர்களின் தலைமுறைகளை பரவசப்படுத்திய பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News