null
'மகாராஜா' படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர் தான் - வெளியான புது தகவல்
- தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
- கடந்த வாரம் வெளியான 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், "மகாராஜா" படத்தில் விஜய் சேதுபதிக்கு முன் விஜய் ஆண்டனி நடிக்க ஆர்வம் காட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அளித்த பேட்டியில், இந்த கதையை முதலில் நான் தயாரிக்க, விஜய் ஆண்டனி நடிப்பதாக இருந்தது. கதையை கேட்ட விஜய் ஆண்டனி கதாநாயனாக நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் நிதிலன் ஏற்கனவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் முன்பணம் வாங்கிவிட்டதால் அவர்கள் தடையில்லாச் சான்றிதழ் தர மறுத்தனர். அதனால்தான் என்னால் இந்த படத்தைத் தயாரிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.
தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் இதுவரை ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.