மலையாள சினிமா எடுத்த அதிரடி முடிவு - காலவரையற்ற வேலை நிறுத்தம்
- கேரள தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
- இந்தாண்டு தற்பொழுது வரை மலையாள திரையுலகில் மட்டும் 28 படங்கள் வெளியாகியுள்ளது
கேரள தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி வரிகளும் நடிகர்களைன் சம்பளங்கள் அதிகமாக இருப்பதால் மலையாள சினிமாவின் படப்பிடிப்பு பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்த விதிமுறை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு தற்பொழுது வரை மலையாள திரையுலகில் மட்டும் 28 படங்கள் வெளியாகியுள்ளது ஆனால் அதில் ரேகாசித்திரம் திரைப்படம் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஆவேஷம், பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தவிர 176 திரைப்படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் மலையாள திரையுலகிற்கு 101 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்ப்பட்டது.
ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் செலவு தற்பொழுது அதிகமாக இருக்கிறது. 60 சதவீத தயாரிப்பு செலவுகள் படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளமாக மட்டுமே செல்கிறது. 50 நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு 150 நாட்கள் வரை நீடிக்கப்படுகிறது. இதில் 30 சதவீத வரிகள் வேறு. இச்சுழ்நிலையில் திரையரங்கிள் வெளியாகும் திரைப்படங்கள் வெறும் 10 சதவீத அதன் தயாரிப்பு செலவுகளை வசூலிக்கிறது. இதனால் இந்த முடிவு எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி. சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.