சினிமா செய்திகள்

லிடியன் நாதஸ்வரம் பரோஸ் படத்திற்கு சிறப்பான இசையை தந்துள்ளார் - மோகன் லால்

Published On 2024-12-23 06:51 GMT   |   Update On 2024-12-23 06:51 GMT
  • நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும்.
  • சந்தோஷ் சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன் லால். நீண்ட காலம் நடிகராக வலம் வருபவரும், தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மோகன் லால், புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். பரோஸ் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய மோகன் லால், "47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள். இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும்."

"இப்படத்தில் மிக திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார்."

 


"படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது."

"ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி," என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News