விஜய்க்கு 3 கதைகள் சொன்னேன்.. அவர் கூறியதை மறக்கவே மாட்டேன் - இயக்குநர் மகிழ் திருமேனி
- விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- அவர் கூறியதை என்னால் மறக்கவே முடியாது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "விடாமுயற்சி" படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் பற்றி பேசினார். அப்போது விஜயிடம் மூன்று கதைகள் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், நான் விஜய் படம் இயக்குவது குறித்து என்னை தவிர பலரும் பல விஷயங்களை கூறி வந்தனர் என்றார்.
இது குறித்து பேசும் போது, "நடிகர் விஜயை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அவரிடம் மூன்று கதைகளை கூறினேன். மூன்று கதைகளை கேட்டதும் அவர் என்னிடம், நீங்கள் என்னை குழப்பி விட்டீர்கள் என்றார். மேலும், மூன்று கதைகளில் ஒன்றை தேர்வு செய்யுங்கள் என்று கூறினார். எந்த படம் செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள் என்று கூறினார். அவர் கூறியதை என்னால் மறக்கவே முடியாது."
"நான் அவரிடம் கூறிய மூன்று கதைகளும் அவர் மட்டுமே நடித்தால் பொருத்தமாக இருக்கும். விஜயின் தற்போதைய நிலைக்கும் அந்த கதைகள் சிறப்பானதாக இருக்கும்," என்றார்.