சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வெளியீடு

Published On 2024-12-18 15:03 GMT   |   Update On 2024-12-18 15:03 GMT
  • நிரஞ்சன் இயக்கம் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
  • கட்சி சேரா பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.

லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் வரும் லோகேஷ் கனகராஜ், அவரது படங்களில் வழக்கமாக வரும் துப்பாக்கி, பவுடர் என எதுவும் இதில் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். கட்சி சேரா பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பால சரவணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சத்யராஜ் நடிப்பில் 'மிஸ்டர் பாரத்' என்ற படம் ஏற்கனவே வெளியானது. இப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்தின் உதவியின் மூல ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லோகேஷ் பெற்றுள்ளார்.

Tags:    

Similar News