புஷ்பா-2 படக்குழுவினர் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.20 கோடி வழங்குக! தெலுங்கானா மந்திரி கோரிக்கை
- பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கணிசமாக ஆதரவை வழங்க வேண்டும்.
- ரோடு ஷோ நடத்தியதால் அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்தது.
திருப்பதி:
தெலுங்கானா சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறை மந்திரி கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி நேற்று செய்தியாளர்கள் சந்தித்தார்.
சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்க வந்த அல்லு அர்ஜூனால் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தார். அவரது மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்திற்கு ரூ.1. கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் அல்லு அர்ஜூன் சினிமா தியேட்டருக்கு வர வேண்டாம் என போலீசார் வலியுறுத்தினர். ஆனால் அவர் போலீசாரில் அறிவுரையை ஏற்கவில்லை. மேலும் அவர் தனது காரின் கூரையில் நின்று ரோடு ஷோ நடத்தியதால் அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்தது.
ரேவதியின் மரணத்திற்கு இதுவும் ஒரு காரணம். ரேவதியின் மரணம் குறித்து போலீசார் அல்லு அர்ஜூனிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் இன்னும் சிறிது நேரம் படம் பார்க்க வேண்டும் என கூறினார். இது அவரது அறியாமை மற்றும் அலட்சியத்தை காட்டுகிறது.
புஷ்பா பட தயாரிப்பாளர் ரூ.2 ஆயிரம் கோடி, 3 ஆயிரம் கோடி வசூலானதாக அறிக்கை வெளியிடுகிறார். இதிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கணிசமாக ஆதரவை வழங்க வேண்டும் தயாரிப்பாளரும், நடிகரும் பொறுப்பை உணர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 20 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.