சினிமா செய்திகள்
null

ஆசிஃப் அலி நடித்த ரேகாசித்ரம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

Published On 2024-12-24 10:04 GMT   |   Update On 2024-12-24 10:05 GMT
  • ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • . திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியான பிறகு உலகம் முழுவது உள்ள மக்கள் இப்படத்தை பாராட்டினர். திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் நடிப்பில் ஓடிடியில் லெவல் கிராஸ் திரைப்படம் வெளியானது. இப்படமும் பலரின் பாராட்டை பெற்றது. இந்நிலையில் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை நடிகர் மம்மூட்டி இன்று வெளியிட்டார். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News