சினிமா செய்திகள்

இந்தி நடிகருடன் காதலில் சமந்தா?

Published On 2024-11-29 03:04 GMT   |   Update On 2024-11-29 03:04 GMT
  • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.
  • சமந்தா சமீபத்தில் வலைத்தளத்தில் பகிர்ந்த கவிதையை பார்த்து அனைவருக்கும் இந்த கவிதை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று பாராட்டினார்.

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார்.

இந்த நிலையில் சமந்தாவுக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரின் முதல் மனைவியின் மகனும் இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு, இந்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தி நடிகை மலைகா அரோராவுடனான காதலை அர்ஜுன் கபூர் முறித்துள்ள நிலையில், சமந்தா சமீபத்தில் வலைத்தளத்தில் பகிர்ந்த கவிதையை பார்த்து அனைவருக்கும் இந்த கவிதை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று பாராட்டினார்.



சமந்தாவிடமும் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா அல்லது யாருடனாவது காதலில் இருக்கிறீர்களா? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியபோது, 'விரைவில் நீங்களே பார்ப்பீர்கள்' என்று பதில் அளித்தார்.

சமந்தா மும்பை செல்லும் போதெல்லாம் அர்ஜுன்கபூர் வீட்டில் தங்குவதாகவும், விருந்துகளுக்கும் இருவரும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவும், அர்ஜுன் கபூரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கிசுகிசுக்கின்றனர். ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News