
முறைதான் ஒருமுறைதான் உன்னை பார்த்தால் அது வரமே! - விஜயை சந்தித்த டிராகன் படக்குழு
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
- இந்த நிலையில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்துள்ளனர்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்த நிலையில் டிராகன் படக்குழு நடிகர் விஜயை சந்தித்துள்ளனர். அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்சனா, லியோன் ஜேம்ஸ், பிரதீப் ரங்கநாதன் விஜயை சந்தித்தனர். இதை மிகவும் நெகிழ்ச்சியுடன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " என்னுடைய நண்பர்களுக்கு தெரியும் நான் எவ்வளவு கடுமையாக வேலை பார்க்கிறேன் நடிகர் விஜயை சந்திப்பதற்கு என்று. அவருக்கு எதிரில் இன்று அமர்ந்தேன். நான் எப்பொழுதும் அதிகமாக பேசுவேன். என்னுடைய டீம் அனைவரும் நான் என்ன பேசப் போகிறேன் என ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் என்னால் பேச முடியச்வில்லை. அவரை பார்க்கும் பொழுது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் மட்டுமே வழிந்தது. நான் அவர் மீது வைத்துள்ள அன்பு உங்களுக்கு சொன்னால் புரியாது. அவர் என்னை பார்த்து "குட் ரைட்டிங் ப்ரோ" என கூறினார் இது போதும். ஜெகதீஷ் அண்ணா மற்றும் அர்ச்சனா மேடமிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்." என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.