
பா. ரஞ்சித் இயக்கும் `வேட்டுவம்' படப்பிடிப்பு தொடங்கியது
- கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார்
- இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.
கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று காரைக்குடியில் தொடங்கியுள்ளது. படத்தை குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.