நான்காயிரம் வருஷம் பாபா இருக்கும்போது சரத்குமார் இருக்கக் கூடாதா?
- சியாம், பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்மைல் மேன்’.
- ஸ்மைல் மேன் திரைப்படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சியாம், பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஸ்மைல் மேன்'. சரத்குமார் நடிக்கும் 150-வது படமான இந்த படத்தில் சிஜா ரோஸ் ,இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன் ,பேபி ஆழியா உள்பட பலர் நடித்துள்ளனர்.
வருகிற 27-ந்தேதி படம் திரைக்கு வருவதையொட்டி சென்னையில் நடந்த புரோமோஷன் விழாவில் சரத்குமார் பேசியதாவது:-
நாம் எடுக்கிற படம் நல்ல படமாக கொடுக்க வேண்டும் என்று தான் எல்லோரும் படம் எடுப்பார்கள். யாரும் பிளாப் படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுப்பதில்லை.
யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது தவறு. நடிகர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள் தேவையில்லை என்றால் கூத்தாடிகள் என்கின்றனர். நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்.
எனக்கு எப்போதும் வயசே ஆகாது. படத்தில் நடித்துள்ள ஆழியா வளர்ந்து என் படத்தில் ஹீரோயின் ஆக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இமயமலையில் இருக்கும் பாபாவிற்கு நான்காயிரம் வயசு. நான்காயிரம் வருஷம் பாபா இருக்கும்போது சரத்குமார் இருக்கக் கூடாதா. சூரியவம்சம் இரண்டாவது பாகம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அறிவிப்பார்.
தேசிய விருது வாங்கும் அளவிற்கு என் மனைவியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.