சினிமா செய்திகள்

Gen Z மோடில் சிம்பு - இருங்க பாய்... அடுத்த சம்பவம் லோடிங்

Published On 2024-10-19 16:08 GMT   |   Update On 2024-10-19 16:08 GMT
  • மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
  • தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.

இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.

இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News