null
சோனியா அகர்வால் நீதிபதியாக நடிக்கும் வில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
- டிரெய்லர் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
- இந்தப் படம் கோர்ட் டிராமாக உருவாகியுள்ளது.
ஃபூட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் (Foot Steps Production) தயாரிப்பில், இயக்குநர் சிவராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வில். இந்தப் படத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த் நடிக்க முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ளது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட் இணைந்து வழங்குகிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படத்தின் கதைக்களம்.
உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் மற்றும் கதாபாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள், தற்பொது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.