null
தங்கலானுக்கு வாழ்த்து கூறிய கங்குவா
- தங்கலன் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
- தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது.
உலகம் முழுக்க வெளியாக இருக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் திரைப்படம் பண்டையக்கால கதையம்சம் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தங்கலான், இந்த வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கங்குவா படத்தில் நடித்த சூர்யா தங்கலான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.