சினிமா செய்திகள்

திவ்யா ஸ்ரீதர்

null

அடித்து துன்புறுத்திய கணவர்.. பிரபல சீரியல் நடிகை திவ்யா கதறல்..

Published On 2022-10-06 16:27 IST   |   Update On 2022-10-06 18:54:00 IST
  • நடிகர் அர்னாவை திருமணம் செய்து கொண்டதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா அறிவித்திருந்தார்.
  • இவர் தற்போது கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கேளடி கண்மணி என்கிற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர். தொடர்ந்து இவர் மகராசி, செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அர்ணவ் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரின் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.


அர்னாவ்

அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டதை நடிகை திவ்யா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை திவ்யா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அர்னாவ் - திவ்யா

மேலும் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ணவ் தற்போது தன்னை விட்டு விட்டு ஹன்சிகா என்ற சீரியல் நடிகையுடன் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சமீபத்தில் தான் எனக்கும் அர்ணவ்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார்.


அர்னாவ் - திவ்யா

இரண்டு வருடத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன்.


திவ்யா

ஆனால் அர்ணவ் என்னை அடித்து நான் கீழே விழுந்ததில் என்னுடைய  வயிற்றில் அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழித்து தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை.

என்னால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது" என்று திவ்யா கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News