சினிமாவில் எதுவும் நிஜம் இல்லை.. ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ஜீவா..
- நடிகர் ஜீவா தற்போது நடித்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம்.
- இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜீவா
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. வரலாறு முக்கியம் திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜீவா
இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ஜீவா கூறியதாவது, "சினிமாவை ரசிகர்கள் எண்டர்டெயின்மெண்டாக தான் பார்க்க வேண்டும். சினிமாவில் எதுவும் நிஜம் இல்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ரசிகர்கள் சினிமாவை பார்த்து உத்வேகமாக வேண்டுமே தவிர விபரீத முடிவை எடுக்கக் கூடாது என்று" கூறினார்.