சினிமா செய்திகள்

ஜீவா

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த ஜீவா

Published On 2022-12-15 13:39 IST   |   Update On 2022-12-15 13:39:00 IST
  • 'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
  • தற்போது மீண்டும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீவா இணைந்துள்ளார்.

'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் தயாரிக்கவுள்ளார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

 

ஜீவா

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் குறித்த அடுத்த அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

 

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் ஜீவா இரண்டாவது முறையாக இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இணைந்துள்ளார்.

Tags:    

Similar News