சினிமா செய்திகள்

சரவணன்

null

கார் பார்க்கிங் இடம் அபகரிப்பு.. நடிகர் சரவணன் புகார்

Published On 2023-05-10 19:15 IST   |   Update On 2023-05-10 19:48:00 IST
  • நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு மவுலிவாக்கத்தில் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
  • அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங் மட்டும் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.

90-களில் பல திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் சினிமாவில் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.


சரவணன் -தாமோ அன்பரசன்

இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தனது இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News